கரூர்,

கரூர் மாவட்டத்தில் பாலத்தின் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி நாமக்கல்லில் உள்ள டி.என்.பி.எஸ்.சி.பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். இன்று காலையில் பரமேஸ்வரி மற்றும் அவரது உறவினரான பிரவீன் இருசக்கர வாகனத்தில்  பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றுப்பாலத்தில் கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த   இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.