நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்டமாக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில் பெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெறக்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.மேரி, ஆர்.சிவகாமி, பி.தேன்மொழி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், பி.கற்பனை செல்வம், வி.முத்துவேல், எம்.மருதவாணன், வி.உதயகுமார், ஜி.மாதவன், பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
வேலூர் மண்டி வீதயில் மாவட்டச் செயலாளர்கள் எஸ். தயாநிதி, எம்.சிவக்குமார் தலைமையில், மாநிலக்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.