வேலூர்,
பெங்களூரை சேர்ந்த ஹேமரத்னா, தியாகராஜன், கிறிஸ் உள்ளிட்ட 7 பேர், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு காரில் வந்துக் கொண்டிருந்தனர். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி களத்தூரை கடந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வந்த வேகத்தில் காரை திருப்பினார். இதில் ஓடுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மறுமார்க்கமாக ஓடியது.
அப்போது, சென்னையிலிருந்து வேலூர் நோக்கி வந்த சரக்கு வேன், கார் மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த காரில் பயணம் செய்த 7 பேரில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மற்ற 4 பேரும் வேன் ஓட்டுநரும், பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து அவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.