புவனேஸ்வர்,
தண்ணீரில் கால்படாமல் இருக்க எம்எல்ஏவை  தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி பகுதியில் பிஜூ ஜனதா தள எம்எல்ஏ பாலபத்ரா மஜி பயணம் செய்து நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நீர் தேங்கி இருந்ததால் அங்கிருந்தவர்களை தன்னை தூக்கி செல்லுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து எம்எல்ஏவை அங்கிருந்தவர்கள் தூக்கி சென்றனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கட்சி மேலிடம் பாலபத்ரா மஜிக்கு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: