சென்னை,
விதிமீறல் கட்டடங்கள் மீது என்ன நடவடிக்கை   எடுக்கப்பட்டது என்பது  தொடர்பாக சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி அமர்வு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் நீதிபதி ராஜேஸ்வரன் தலைமயிலான ஒரு நபர் குழு  விதிமீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்த  நகர்புற திட்டமிடல் துறை   சட்டத்தில் 113வது பிரிவில் சில மாற்றங்களை  பரிந்துரைத்து இருந்தது. அவைகள் இது வரை அமல்படுத்தப்படவில்லை.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில்  விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் 2007-க்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைபடுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாகவும், 2007-க்கு பின்னுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய  மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: