ஆம்.. இதை சத்தமாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது…..
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனிக்குகைக்கு பக்தர்கள் சென்றுவிட்டு திரும்பிய போது, பேருந்தின் மீது பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த மனிதநேயமற்ற தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டார் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈவிரக்கமற்ற தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

செய்தியை அறியும் சாமானியனை இது அதிர்ச்சியூட்டக்கூடியது. கொஞ்சம் யோசிக்க தொடங்குவோருக்கு ஒரு கேள்வி எழக்கூடும்.
ஒரு சுற்றுலா அதுவும் ஆன்மீக சுற்றுலா பேருந்து என்றால் அதில் குறைந்தது 50 பேராவது பயணிப்பார்கள். மிகப்பயங்கரவாத எண்ணம் கொண்ட இயக்கத்தினர் நடத்திய ஆயுதத்தாக்குதலில் 7 பேர் தவிர்த்து ஏனையோர் உயிர் தப்பியது எப்படி?
சத்தியமாய் மோடியின் போலீசோ ராணுவமோ அல்ல. அந்த பேருந்தின் ஓட்டுநர் மட்டுமே அவ்வளவு பேர் உயிர்பிழைக்க காரணம். துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்கத் தொடங்கியவுடன் மிக வேகமாக, சாதுர்யமாக பேருந்தை இயக்கி அவ்வளவு பேரையும் மீட்டுள்ளான்.
அவனே என் போற்றுதலுக்கு உரியவன்.
அவனே என் நன்றிக்குரியவன்
அவன் பெயர் சலீம்
ஆம் அவன் ப்ரியத்துக்குரிய இஸ்லாமிய சகோதரன்

  • John Paul

Leave a Reply

You must be logged in to post a comment.