சென்னை;
ஜிஎஸ்டி வரியால், மருந்து மற்றும் மாத்திரை விலை குறைய வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர் சங்க தலைவர் கூறியுள்ளார்.

மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்து – மாத்திரைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கலால்வரி, மதிப்பு கூட்டுவரி என தனித்தனியாக மருந்துகளுக்கு வரி வசூலிக்கப்பட்டது. தற்போது ஜூலை 1-ஆம் தேதி முதல் மருந்துகளுக்கு 3 வகையான ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி-யால் மருந்து விலை உயருமா? என்பது குறித்து தமிழ்நாடு கிளை மருந்து உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முகம்மது யூசூப் கூறியிருப்பதாவது:
மருந்துகளுக்கு முன்பு வாட் 8 சதவீதமும், கலால் வரி 12 சதவிகிதமும் விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி மூலம் மருந்துகள் 3 வகையாக பிரிக்கப்பட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12 சதவித ஜி.எஸ்.டியும், பட்டியல் இடப்பட்ட, டாக்டர்கள் பரிந்துரைக்கின்ற மருந்துகளுக்கு 7 சதவிகிதமும் ஓ.சி.டி. தயாரிப்புகளான ‘அனாசின்’, சாரிடர், விக்ஸ் போன்ற மருந்துகளுக்கு 5 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மருந்துகள் விலை குறையும் என்று கூற முடியாது. ஆனால் கூடாமல் இருக்கலாம்.

மேலும் மருந்துகளை அடைத்து விற்க பாட்டில், பாயில் மருந்துகளை உள்ளடக்கும் சிரஞ்சி, டியூப் போன்ற உபகரணங்களுக்கு வரி விதிக்கப்பட்டு இருப்பதால் அதனால் மருந்து விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தற்போது உள்ள மருந்துகள் விற்பனை புதிய மருந்துகள் வந்தால்தான் விலையேற்றம் குறித்து தெளிவாக கூற முடியும். ஆனால் தற்போதைய நில வரப்படி மருந்துகள் விலையில் எவ்வித ஏற்றமும் இல்லை. இவ்வாறு யூசுப் கூறியுள்ளார்.

சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் மோகன்குமார் அளித்துள்ள தகவலில், மருந்துகள் விலை தற்போது கூடவில்லை என்றாலும், விலை உயருமா? என்பது ஆகஸ்ட் மாதம் தான் தெரியும்; தற்போதைய இருப்புகளை 7 சதவிகிதத நஷ்டத்தில்தான் விற்பனை செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: