சென்னை,
பொது விநியோகத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அந்த சங்கத்தின் சென்னை தெற்கு மண்டல மாநாடு சென்னையில் தலைவர் எஸ்.கண்ணதாசன் தலைமையில் வெள்ளியன்று (ஜூலை 7) நடைபெற்றது. பி.மணிகண்டன், எம்.தமிழரசன், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் பி.ஜெய்சங்கர் வரவேற்றார்.
மாநாட்டை சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார் துவக்கி வைத்துப் பேசினார். ஆண்டு அறிக்கையை செயலாளர் எம்.ஜார்ஜ் பெர்ணாண்டஸ் சமர்ப்பித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் புகழேந்தி சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் ஆர்.புவனேஸ்வரன், மநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.சிவசங்கரன், மாநில துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ்.கோவர்த்தனன், எஸ்.லூர்துசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்திப்பேசினர்.
நியாய விலைக் கடைகளில் ஏற்படும் சில்லரை செலவினங்களுக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் சுயசேவை பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடு போகாமல் தடுக்க போதுமான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு  ஏற்றார்.  போல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், தெற்கு மண்டலத்தில் ஒரு வருடமாக செயல்படாத எட்டு 20 ரூபாய் அரிசிக் கடைகளில் உடனடியாக விற்பனையைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய செயல் தலைவராக பி.நாகேஷ்வரராவ், தலைவராக எஸ்.கண்ணதாசன், செயலாளராக எஸ்.ஜார்ஜ் பெர்ணாண்டஸ், பொருளாளராக எம்.புகழேந்தி உள்ளிட்ட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் இ.சண்முகவேலு மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். மண்டல துணைத் தலைவர் எஸ்.லோகாச்சாரி நன்றி கூறினார்.
படம் சிவில் சப்ளைய`ஸ் யூனியன் 1
சிவில் சப்ளைஸ் யூனியன 1

Leave a Reply

You must be logged in to post a comment.