மும்பை,

நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் குறிப்பிட்டுள்ளது.

மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்பாக 2016 – 17 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தில் , நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்திற்கடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.குஜராத் மாநிலம் முதலீடுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2-வது இடத்திலும் உள்ளன.

கடந்த 2008-09-ல் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி மற்றும் தேக்க நிலை ஏற்பட்ட போதும் கூட தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, உத்தரப்பிரதேசம்  ஆகிய இந்த 5 மாநிலங்களிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

2010-11 நிதியாண்டில் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் முறையே 37 புள்ளிகளுடன் 5 சதவீதமும் மகாராஷ்டிரா 43 புள்ளிகளுடன் 35 சதவீத வளர்ச்சியையும் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.  சிறு, குறு தொழிற்சாலைகளின் பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 44 லட்சம் சிறு,குறு தொழிற்சாலைகள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில், மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்கள் முறையே 34 லட்சத்து 64 ஆயிரம், 33 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 30 லட்சத்து 60 ஆயிரம் சிறு குறு தொழிற்சாலைகளும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: