இராசிபுரம், ஜூன் 5-
இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கும் மழை நீரால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ராசிபுரம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பேருந்து நிலையம் அருகிலேயே அன்றாடம் செயல்படும் உழவர் சந்தையும், செவ்வாய் கிழமை தோறும் செயல்படும் வாரச்சந்தையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பேருந்து நிலையத்தில் இராசிபுரம் நகராட்சியினர் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பு என்ற பெயரில் ஆங்காங்கே குழிகளை தோண்டி வைத்துள்ளனர். இச்சூழலில் சிறிதளவு மழை பெய்தாலே பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் பெருமளவில் தேங்கி சகதியாய் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும்,
மழைநீர் தேங்குவதால் தோண்டப்பட்ட குழிகள் தென்படாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து படுகாயமடையும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

அதேநேரம், இதனை சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.