சேலம், ஜூலை 5-
இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலத்தில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மூன்று ஆண்டு கால மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன்ஒருபகுதியாக குன்னூரில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் சேலம் வந்த பிரச்சார வாகனத்திற்கு சேலம் புதுரோடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.