இட்டாநகர்,

அருணச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க சென்ற போது மாயமான ஹெலிகாப்டரின் சேதமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அருணச்சல பிரதேசம் பபும் பரே மாவட்டத்தில் உள்ள சகலீ மற்றும் தாம்புக் நகரங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்க 3 வீரர்களுடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் செவ்வாயன்று மாலை சுமார் 5.30 மணியளவில் மாயமானது. இதையடுத்து இராணுவ வீரர்கள், இந்தோ- திபெத்திய எல்லை காவலர்கள் மற்றும் மாநில காவலர்கள் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியில் இன்று இரண்டாவது நாளாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாயமான ஹெலிகாப்டரின் சேதமடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் அதில் பயணம் செய்த வீரர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: