இராஜபாளையம்;
இராஜபாளையம் காந்தி கலைமன்ற அரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று  நடைபெற்றன.
இதில் சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 45 பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
7 முதல் 11 வயதுக்கு உள்பட்டோருக்கான சப்ஜூனியர் போட்டிகள் 11 எடை பிரிவுகளிலும்,
12 முதல் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான கேடிட் போட்டிகள் 10 எடைப் பிரிவுகளிலும் நடைபெற்றன.
3 ஆட்டக் களங்களில் நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர்.
இறுதிப் போட்டியில் ஒவ்வொரு எடைப் பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த 84 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் சேலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.