ராஞ்சி, ஜூலை 2 –
முஸ்லிம் இளைஞர் அஸ்கார் அன்சாரி படுகொலை தொடர்பாக, பாஜக தலைவர்கள் 2 பேரை காவ ல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி முகம்மது அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி என்ற இளைஞரை, ‘பசு குண்டர்கள்’ அடித்துக் கொன்றனர். அவரது வாகனத்திற்கும் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வாரம் 15 வயது முஸ்லிம் சிறுவன் ஜூனைத் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், ‘பசு குண்டர்கள்’ அடுத்த படுகொலையை அரங்கேற்றியது, கடும் கண்டனத்திற்கும் உள்ளானது.

அன்சாரியை நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு படுகொலை செய்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் இவ்வழக்கைத் திசைத்திருப்ப முயற்சித்தனர். ஆனால், பசு குண்டர்களாலேயே அன்சாரி அடித்துக் கொல்லப்பட்டார் என்பதற்கான வலுவான ஆதார ங்கள் இருப்பதன் காரணமாக, இச்சம்பவம் தொடர்பாக பாஜக-வின் ராம்கர் மாவட்ட மீடியா பிரிவு தலைவ ரான நித்யானந்த் மஹாடோ மற்றும் அன்சாரியை கொடூரமாக தாக்கிய சோது ராணா ஆகியோரை காவல்து றையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.