உதகை, ஜூலை 2-
உதகையில் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பகுதி நேரக்கலைப் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது என உதகை மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அடரசு கலை பண்பாட்டுத்துறை கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கலைகள் பயில பகுதி நேர கலைப்பயிற்சியினை அளித்துவருகிறது. இப்பயிற்சி உதகை ஜவகர் மன்றம் புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளி, மேரிஸ் ஹில்லில் இயங்கி வருகிறது. இம்மன்றத்தில் குரலிசை (வாய்பாட்டு), கீபோர்டு, பரதநாட்டியம் மற்றும்ஓவியம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 3 முதல் 5 மணிவரை ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் சேரலாம். பயிற்சிக் கட்டணம் இல்லை. ஆனால் சிறுவர் மன்றத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தாவாக ரூ300 மட்டும் செலுத்தப்பட வேண்டும். ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் பயிற்சிகள் 2018 மார்ச் மாதம் இறுதிவரை நடைபெறும். இம்மன்றத்தில் உறுப்பினராக சிறார்கள் மாவட்ட, மாநில தேசிய அளவிலான போட்
டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஜூலை 1ஆம் தேதிமுதல் முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு உதகை ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9442147606, 9943433742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.