இராமேஸ்வரம், ஜூலை 2-
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் வலைகளை அறுத்தெறிந்து விரட்டியடித்தனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து 350-க்கும் மேற் பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சனிக்கிழமையன்று நள்ளிரவில் கச்சத்தீவு அருகே 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன்,20-க்கும் மேற்பட்ட படகுகளில் வலைகளை அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் பல லட்சம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பினர். மத்திய பாஜக அரசு தமிழக மீனவர்களை கண்டுகொள்ளவில்லை என்று மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.