கோபி, ஜூன் 30-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக்கோரி கொடிவேரி பேரூராட்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ஆகவே, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனக்கோரி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரி பேரூராட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு டி.ஜி.புதூர் பகுதி செயலாளர் ரங்கநாயக்கர் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனுசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருத்தணிகாசலம், மாணிக்கம், ரவி, நந்தகுமார், கோபாலன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.