கோவை, ஜூன் 30-
கோவையில் பெட்ரோல் பம்ப் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் திடீரென பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோவை ஈச்சனாரி அடுத்த செட்டிபாளையம் பகுதியில் கில்பர் கோ வீடர் ரூட் இந்தியன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் எம்.என்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய அரசின் பெட்ரோலியத் துறையின் ஒப்பந்தத்தின் பேரில் பெட்ரோல் பம்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் 100 நிரந்தர ஊழியர்களும், 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் என 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை திடீரென பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகையில், எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பணிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பினர் கூறுகின்றனர். இதனால் வருவாய் இன்றி எங்களின் குடும்பம் கடுமையான பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகும். எனவே, குறைந்தபட்சம் மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் அல்லது மூன்று மாத ஊதியத்தையாவது நிர்வாகம் வழங்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: