பழனி  உழவர் சந்தையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இது பற்றி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உதவி ஆட்சியர் வினித் விசாரணை நடத்தினார்.

பழனி உழவர் சந்தையில் தக்காளி விலை ரூ.30 என பட்டியலில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் கடைகளில் ரூ.45 வரை விற்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கடுமையாக ஆட்சேபனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு உதவி ஆட்சியர் வினித் வந்து விசாரணை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறும் போது உழவர் சந்தை கடைகளில் விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகள் உள்ளனர். அதனால் விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன என்றார்.

Leave A Reply

%d bloggers like this: