தாராபுரம், ஜூன் 30 –
அமராவதி ஆற்றுப்படுகையில் வறட்சி காலங்களில் டிராக்டர் முலம் மணல் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அமராவதி ஆற்றுப்படுகையில் தாராபுரம் எல்லையான கள்ளிவலசிலிருந்து மூலனூர், மணலூர் வரை ஆற்றுப்படுகையில் வறட்சி காலங்களில் தனியார் வயல்களில் மணல் டிராக்டர்கள் வர பாதை அமைத்து இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் திருடப்படுகிறது. குறிப்பாக, ஆலடிக்களம் வாய்க்கால் பகுதியில் டிராக்டரை ஓட்டி வந்து முக்கிய சாலைக்கு மணலை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.

ஆகவே, பொதுப்பணித் துறையினர் ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில் ஆற்றுப்படுகையில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும், மணல் திருடர்களுக்கு தடை ஏற்படுத்தும் வண்ணம் வாய்க்கால் பாதையில் உள்ள வழித்தடங்களை அடைக்க வேண்டும். இதேபோல், குறிப்பாக, வருவாய்த் துறையினர் பெயரளவுக்கு இரவு நேர மணல் திருட்டு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல், முழுவீச்சில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: