முதியோர் ஒய்வூதியத்தை முறையாக வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் சார்பில் வியாழனன்று திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் பகுதி தலைவர் செல்வகுமாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பகுதிச் செயலாளர் ஆறுமுகலட்சுமி,பொருளாளர் புஷ்பா, மாநிலக் குழு உறுப்பினர் பாக்கியம், அம்சா உள்ளிட்ட 100  க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: