தீக்கதிர்

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் சிக்கிம் சென்றார்.

புதுதில்லி;
இந்தியாவின் எல்லையோர மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் இந்தியாவும் சீனாவும் 220 கிலோமீட்டர் வரை எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இருநாட்டு ராணுவ வீரர்களும் இப்பகுதியில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய – சீன எல்லைக்கோடு அருகே சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இரண்டு பதுங்கு குழிகளையும் அழித்ததாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது.

சீன ராணுவம் அதை மறுத்ததோடு, இந்திய வீரர்கள் தான் எல்லை தாண்டி வந்ததாக கூறியது. இந்நிலையில், இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், இரண்டு நாள் பயணமாக வியாழனன்று சிக்கிம் சென்றார். அவர், சிக்கிமிலுள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.