ராய்ப்பூர்;
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய ‘ஆபரேஷன் பிரஹார்’ என்ற தாக்குதலில் மாவோயிஸ்டுகள் என்று கூறப்படும் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தொண்டமர்கா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் மாநில காவல்துறையினரும் இணைந்து சனிக்கிழமை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 56 மணிநேரம் நடைபெற்ற ‘ஆபரேஷன் பிரஹார்’ என்ற இந்த தேடுதல் வேட்டையின்போது, பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கடும் சண்டை நடந்தது.

அதன் முடிவில், 12-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பிலும் 3 பேர் பலியாகினர்.

Leave A Reply

%d bloggers like this: