கரூர்,
கலாம்சாட் செயற்கைகோளை தயாரித்த கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவன் முகமது ரிபாத் 4 சென்டி மீட்டர் அளவில் 64 கிராம் எடை கொண்ட கையடக்க கலாம் சாட் செயற்கை கோளை தயாரித்தார். அந்த செயற்கைக்கோள் வெள்ளியன்று நாசா அனுப்பிய பிஎஸ்எல்வி சி 38 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு ரிபாத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் சாதனை மாணவன் ரிபாத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.