சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உணவகங்களில் மது விற்க அனுமதியளித்து அம்மாநில சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடந்த சட்டப்பேரவையில் , நெடுஞ்சாலைகளில் உள்ள உயர்தர உணவு விடுதிகளில் மது விற்க அனுமதியளித்து சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மது விற்கும் உணவகங்கள் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். உணவகத்தின் வளாகத்திற்குள் மட்டுமே மது அருந்த அனுமதிக்க வேண்டும். நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரம் தள்ளி உணவகள் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்.  என சட்டதிருத்ததில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: