டேராடூன்;
உத்தரகாண்டில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை முழுமையாக வழங்கும் வரை, அதிகாரிகளுக்காக கார், ஏசி போன்றவற்றை வாங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொதுநல வழக்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேசைகள், இருக்கைகள், கரும்பலகைகள், நூலகம், கழிப்பறை போன்ற வசதிகளை 3 மாதங்களில் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதை அரசு நிறைவேற்றாததால் ஆத்திரமுற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காதவரை, அரசு அதிகாரிகளுக்கு கார்கள், ஏ.சி., பர்னிச்சர்கள் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரவு அமலாக்கப்படும் வரை அதிகாரிகளுக்கு ஊதியத்தை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் கல்வித்துறை அமைச்சகத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: