சென்னை,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகர காவல் ஆணையர் ஜூலை 4ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் நகர ராஜகணபதி கோவிலை சுற்றி உள்ள கழிவுநீர் கால்வாய்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று  கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் வந்ததால், சேலம் சுகவனேஷ்வர் கோயில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையளிக்கும்படி வாழப்பாடி தாசில்தாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  அதன்படி தாசில்தார் ஆய்வு செய்யச் சென்ற போது அங்கிருந்த வியாபாரிகள் அவரை முற்றுகையிட்டு ஆய்வு செய்யவிடாமல் தடுத்தனர்.  இதனை அப்படியே அறிக்கையாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி கிருபாகரன், தாசில்தாருக்கு  உரிய பாதுகாப்பு வழங்காத சேலம் காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர் ஆகியோர் வரும் 4  ஆம் தேதி நேரில் ஆஜராகி   பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: