சென்னை, –
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் அதிமுகவின் முடிவுக்கு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வான தமீமுன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி,“ இப்தார் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக பயணிப்போம் என்றார்.
இப்படி பேசி முடித்த 2 மணி நேரத்திற்குள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக் கிறது. அவர் எடுத்திருக்கும் முடிவு அரசியல் அரங்கில் ஆழமான விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது என்றார்.
இதில் ஏற்கனவே அறிவித்த முடிவில் மனிதநேய ஜனநாயக கட்சி தெளிவாக இருக்கிறது. அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் ஆதரவு தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் முன்னெடுக்கும் சமய சார்பற்ற, சமூக நீதியை மதிக்கும் ஒருவருக்கே என்பதை திட்டவட்டமாக தெரிவித் துக் கொள்கிறோம். பதவிகளை விட எங்களுக்கு கொள்கைகளே முக்கியம், நாட்டு நலனை காக்க, சமூக நீதி சக்திகளுடன் இணைந்து இவ்விஷயத்தில் செயலாற்றுவோம் என்றும்  அன்சாரி மேலும் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.