பிலாஸ்பூர்;
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் ராஜ். இவர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரெயில்வே நிலையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பங்கஜ் ராஜ் தன் உயர் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.கடிதத்தில்       ” ஜூலை மாதம் இந்துக்கள் பண்டிகை வரவிருக்கிறது.இதனால் தங்கள் வீட்டில் ஜூலை மாதம் முழுவதும் அசைவம் எதுவும் சமைக்க மாட்டோம். பண்டிகை காலத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது.
இதனால் ஏக்கத்தில் இருக்கும் எனக்கு சிக்கன் சாப்பிடுவதற்கு ஒரு வாரம் விடுமுறை தர வேண்டும் என்றும் அப்போது தான் தன் உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்கும், அதன் பின் தன்னால் உற்சாகமாக வேலை செய்ய முடியும்” என்று கடிதத்தில் பங்கஜ் ராஜ்  கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.