ஈரோடு, ஜூன் 22-
சிவகிரியில் சத்துணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 502 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் வியாழனன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 55 மாணவர்களில் நான்கு மாணவர்கள் மட்டும் சிகிச்சைக்கு பிறகும் தலை சுற்றல் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் அவரச பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், கோட்டாட்சியர் நர்மதா தேவி மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து விசாரித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: