பாஜக அறிவித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை பாஜக நேரடியாக தில்லியில் இருந்து இயக்கி வருகிறது. குறிப்பாக அதிமுக வை முதலில் பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுகவை இரண்டாக பிரித்தது. பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுக வை கைப்பற்ற முழுமையாக முயன்றது. ஆனால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் சசிக்கலா முதல்வராக முன்நிறுத்தப்பட்டார். உடனே ஊழல் வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடனே தினகரனை அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளராக அறிவித்த ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்ததோடு, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 122 பேரை கூவாத்தூர் சொகுசு விடுதிக்கு அழைத்து சென்று அங்கு தங்கவைக்கப்பட்டனர். அதன் பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதில் பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி .தினகரனை முதல்வராக்கும் நோக்கில் ஆர்.கே.நகர் வேட்பாளராக சகிக்கலா அணி அறிவித்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வாக்கிற்காக வாரி வழங்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டில் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிவித்தது.
அதன் பின்னர் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தில்லி காவல்துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து எடப்படி பழனிச்சாமிக்கு செக் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து எடப்பாடி தலைமையில் அமைச்சர்களுக்கும் மத்திய அரசு செக் வைத்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாய் எடப்பாடி பழனிச்சாமி அரசு செயலாளர்கள் இன்றி மோடியை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர், தமிழக மக்களின் நலனை பறிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆதரவு அளித்து வந்தது. குறிப்பாக தமிழக மக்களை கடுமையாக பாதிக்கும்  நீட்தேர்வு, காவேரி மேலாண்மை வாரியம், ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்தது.
இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் பாஜக கட்சி தலைமையிடமே தங்களின் ஆதரவை கேட்க வேண்டும். குறிப்பாக சசிக்கலா மற்றும் டி.டி.வி.தினகரனிடம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் பாஜக அதனை பாஜக கண்டுகொள்ளவில்லை. மேலும் எடப்படி பழனிச்சாமியிடம் மோடி ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்  இன்று ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர்  மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஜனாதிபதி தேர்தலில் பாஜக அறிவித்திருக்கும் ராம்நாத் கோவிந்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.
இந்நிலையில் ஒ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக அணியும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டி.டி.வி.தினகரன் அணி எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒரு வேளை துணைப்பொதுச்செயலாளர் விருப்பத்திற்கு மாறாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் என கூறி சட்டமன்றத்தில் எடப்பாடி அரசிற்கு எதிராக செயல்படுவார்களாக என்பது போகப்போகத்தான் தெரியும்.
ஆனால் மூன்று அணிகளுமே பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பட்டியலை வைத்து பாஜக தொடர்ந்து அதிமுகவை மிரட்டி வருவதாகவும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் கூறிவருவது உண்மை என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.