ராய்பூர்;
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹன்சார் கிராமத்தில் அண்மையில், காவல்துறையினருக்கும், மாவோயிஸ்டுகள் என்று கூறப்படுவோருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சண்டையின்போது, காவல்துறையின தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் அந்த பகுதியிலிருந்து தப்பினர். அவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், சண்டை நடந்த பகுதியில், பெண் மாவோயிஸ்டுகள் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: