சென்னை,
சென்னையில் உள்ள 3800 பழைய மின்பகிர்மான பெட்டிகளை மாற்றுவது குறித்து சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி விளக்கம் அளித்தார்.

மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் ஆர்.நட்ராஜ் துணைக்கேள்வி எழுப்புகையில், “தொகுதி முழுவதும் பழுதடைந்த மின்மாற்றிகள் மாற்றப்படுமா? 110 விதியின் கீழ் சென்னையில் சென்னையில் பழுதடைந்த 3800 மின்பகிர்மான பெட்டிகள் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எப்போது செயல்படுத்தப்படும்? பல இடங்களில் கருநாகங்கள் போல் ஆபத்தான நிலையில்  பூமிக்கு மேலே புதைவட கம்பிகள் போடப்பட்டுள்ளன. அவற்றை புதைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை. மழை, காற்று போன்றவை அதிகளவாக இருக்கும்போது நிறுத்தி வைக்கப்படும். 3800 மின்பகிர்மான பெட்டிகள் டெண்டர் விடப்பட்டது. அச்சமயம் ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டனர். வழக்கு நிலுவையில் இருப்பினும், அவசர தேவைக்கு கொள்முதல் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதைவட கேபிள்களை பூமிக்குள் புதைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். உதய் திட்டத்தின் கீழ் மத்திய அரசு , மாநில அரசுக்கு 95,000 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது. நிதிப்பற்றாக்குறை இல்லை என்றார்.

Leave A Reply