சென்னை,
சென்னையில் பல பகுதிகளில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தேங்கிய மழை நீரில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு ஆந்திரா கடற்கரையில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காரணமாக சென்னை கொளத்தூரில் தேங்கிய நீரில் மின்கசிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற வாலிபர் கார்த்தி என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply