சென்னை,
வன விலங்குகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து வன விலங்குகளையும் பாதுகாக்கும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கு தொடர்பாக குழு அமைத்து, அதன் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் கூறினார்.

பேரவையில் செவ்வாயன்று (ஜூன் 20) துணைக்கேள்வி எழுப்பி உறுப்பினர் தெங்கம் தென்னரசுவிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்ட பதிலை கூறினார். மேலும் அவர் குறிப்பிடுகயில், விருதுநகர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் மயில், மான் போன்ற வனவிலங்குகள் அதிகரித்துள்ளன. வன விலங்குகளை பாதுகாப்பதுபோலேவே, சமவெளிப்பகுதியில் உள்ள மயில், மான் போன்றவற்றை பாதுகாக்க வனத்துறை காவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார்.

முரட்டுப்பாளையம் பள்ளி நிலை உயர்வு
ஈரோடு மாவட்டம் முரட்டுப்பாளையத்தில் உள்ள  உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக நடப்பாண்டே நிலை உயர்த்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பேரவையில் உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் எழுப்பிய துணைக்கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.

ஒப்பந்தப் பேராசிரியர்கள் நிரந்தரம் இல்லை
பேரவையில் துணைக்கேள்வி எழுப்பிய முனைவர் க.பொன்முடிக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஒப்பந்தப் பேராசிரியர்களை நிரந்தரப்படுத்தும் திட்டம் இல்லை என்றார்.

Leave A Reply