சென்னை ,

வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று சாலை பாதுகாப்புக் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் , போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் , உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டுநர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி , வாகன ஓட்டிகள் , கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். வாகன சோதனையின் போது அசல் உரிமத்தை காண்பிக்க வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னல் அமர்ந்திருப்பவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். காப்பீட்டு உரிமம் இல்லாத வாகனங்கள் சிறை பிடிக்கப்படும், வாகனத்தை அதிவேகமாக இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்ய  இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply