பாட்னா;
ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்த போது, அவரின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி ஆகியோர் பெயரில் ஏராளமான நிலங்கள் மற்றும் வீடுகளை பினாமி சொத்துகளாக வாங்கிக் குவித்ததாக புகார் எழுந்தது.

தில்லியில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை பினாமி பெயரில் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டும் அதில் ஒன்றாகும். இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் லாலுவின் மகன் தேஜஸ்வி, மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ்குமார் ஆகியோர் பினாமி பெயரில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் தில்லி வீடு ஒன்றையும், மனையிடத்தையும் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

Leave A Reply