இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, மத சிறுபான்மையினருக்கு எதிரான, தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, தலித் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய குழந்தைகள் கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கட்டும் என்பதாக ஏராளமான கருத்துகளை, காவி சமூக விரோத பார்வைகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்வைத்து வருபவர் தான் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இப்படி வெளிப்படையாக பேசி வரும் ஒருவரை எப்படி தைரியமாக ஒரு வேட்பாளராக அறிவிக்கிறார்கள் பாருங்கள்.

ஒரு தேசத்தை, அதன் சமூகக் கட்டுமானத்தை, அந்த தேசத்தில் காலம் காலமாக ஒடுக்கப்படுகிறவர்களை இதை விட கேவலப்படுத்த முடியாது. (http://www.oneindia.com/india/islam-christianity-alien-to-nation-ram-nath-kovind-had-said-in-2010-2469435.html) (http://www.huffingtonpost.in/2017/06/19/bjps-presidential-candidate-once-said-islam-and-christianity-a_a_22489388/)

(ராம்நாத் கோவிந்த் உதிர்த்த ஏராளமான செய்திகள் இணையத்தில் இருந்தன, இதை எல்லாம் கடந்த ஒருவார காலமாக பல இணையதளங்களில் இருந்தும் படு வேகமாக நீக்கி வருகிறது பாஜகவின் IT பிரிவு)

*** ஆதாரங்கள் இதை நீக்கும் முன் பகிருங்கள், விரைவில் எல்லா ஆதாரங்களும் அழிக்கப்படும், வரலாற்றையே திரிப்பவர்களுக்கு இதுவெல்லாம் சகஜம் தானே.

-Muthu Krishnan

Image may contain: 2 people, text

Leave A Reply