பாட்னா;
மத்திய அரசு சார்பில் புதனன்று கடைப்பிடிக்கப்படும் யோகா தினத்தில் பீகார் மாநிலம் பங்கேற்காது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
தான் யோகவிற்கு எதிரானவர் அல்ல என்றும், தானும் யோகா செய்வதாகவும்; ஆனால், யோகாவை விளம்பரத்திற்காக செய்வதையே எதிர்ப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ள நிதிஷ்குமார், “யோகா செய்பவர்கள் மது அருந்தாமல் இருப்பது அவசியம் என்ற நிலையில், யோகாவை விளம்பரப்படுத்தும் பாஜக, முழு மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?” என்ற கேள்வியையும் மோடிக்கு எழுப்பியுள்ளார்.
யோகா தினம் கொண்டாடப்படும் அதேநாளில், பீகார் மாநிலத்தில் உலக இசை தினத்தைக் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதையொட்டி பீகார் மாநில அரசு சார்பில் பாரம்பரிய இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.