தாராபுரம், ஜூன் 20-
பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த ஆளும் அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபுரம் தாலுகா மாநாடு தளவாய்பட்டினம் சாலையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் என்.சசிகலா, மாவட்ட பொருளாளர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்மாநாடடில் தாராபுரம் வட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். ரேசன் கடையில் பொருட்கள் முழுமையாக வழங்க வேண்டும்.

தாராபுரம் வட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை முடவேண்டும். பெண்களுக்கெதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சோமனூத்து பகுதிக்கு அரசு பேருந்து வசதி செய்து தருவதுடன், மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். நுறுநாள் வேலைதிட்டத்தை பேருராட்சி பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வுஇம்மாநாட்டில் தாலுகா தலைவராக ஜி.ராஜேஸ்வரி, செயலாளராக கே.மோதிலால் சங்கரி, பொருளாளராக ஆர்.ரம்யா மற்றும் துணை தலைவராக சுலோச்சனா, துணை செயலாளராக ராஜாமணி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply