அகர்தலா;
திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனம் மழையால் அங்கு வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹவுரா, கோவாய் ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சதுர், ஜிரணியா மற்றும் மோகன்பூர் ஆகிய இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புக்களை சூழ்ந்த நிலையில், அந்த பகுதியில் வசித்து வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, பத்திரமான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கென மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் திங்களன்று இரவு, அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய முதல்வர் மாணிக் சர்க்கார், மீட்புப்பணிகள் தொடர்பான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
அருணாசலபிரதேசம்;
இதேபோல அருணாச்சல பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, கன மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் பலுக்பாங்க் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுற்றுலா பயணிகள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக எந்த வித உதவியும் கிடைக்காமல் தவிப்புக்கு உள்ளாகினர். அவர்களில் 70 பெண்கள் மற்றும் 50 குழந்தைகள் என 200 பேரை ராணுவம் மீட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.