தில்லி ,

ஜி.எஸ்.டி வரியை வரும் ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்கிறார்.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கேரளா மற்றும் காஷ்மீர் மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி மsooதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு ஜி.எஸ்.டி-யை நாடாளுமன்றத்தில் வைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்கிறார்.இந்த அறிமுக விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி , பிரதமர் மோடி பங்கேற்கிறார்கள். மேலும் இந்த அறிமுக விழாவில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , எச்.டி.தேவகவுடா, மாநில முதல்வர்கள் , நிதியமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஜி.எஸ்.டி குறித்து பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசுகிறார்கள். அதன் பிறகு ஜி.எஸ்.டி குறித்து 2 குறும்படங்கள் திரையிடப்படுகிறது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Leave A Reply