சென்னை ,

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று முழுவதுமாக இடிக்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த 31 ஆம் தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடம் முழுவதும் பற்றி எரிந்த தீயை 36 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். தீ விபத்தினால் கட்டிடத்தின் உறுதி தன்மை குறைந்ததை அடுத்து , கட்டிடத்தை இடிக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி கட்டிடத்தை இடிக்க பயன்படுத்திய ஜா கட்டர் இயந்திர உதவியாளர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 17 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று முழுவதுமாக இடிக்கப்பட்டது. இதனால் அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி நாளை முதல் தொடங்குகிறது.

Leave A Reply