சென்னை,
வீட்டிலிருந்தே தொழில் செய்யும் மகளிர் தொழில் முனைவோரையும், பகுதி நேரமாக வணிக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ‘சுயசக்தி விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் ‘சுயசக்தி விருதுகளை’ உருவாக்கி உள்ளது. வீட்டிலிருந்தபடியே கேக் தயாரித்தல், பொருள் விற்பனை, பயிற்சி அளித்தல், பகுதி நேரத் தொழில் போன்ற பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. தங்கள் தொழில் முயற்சிகளில் தனித்துவமிக்க சாதனை புரிந்தோர் ‘சுயசக்தி விருதுகளுக்கு’ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கான கடைசி தேதி ஜூலை 11 ஆகும்.

மேலும் விவரம் அறிய றறற.hடிஅநயீசநநேரசயறயசனள.உடிஅ  அல்லது றறற.ளரலயளயமவாi.உடிஅ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்; 99400 11417 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதுகளை திரைப்படக் கலைஞர்கள் சுஹாசினி மணிரத்தனம், கார்த்தி உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தினர்.

Leave A Reply