டெல்லி:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து கும்ப்ளே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்பியுள்ளதாக கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஆனால் பிசிசிஐ வட்டாரம் ஏற்கனவே மேற்கிந்தியத்தீவுகள் உடனான தொடர் வரை கும்ப்ளே நீடிக்க கோரிக்கை முன் வைத்திருந்தது.

கும்ப்ளே ராஜினாமா கடிதத்தால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு பயிற்சியாளர் பணியில் நீடிக்க விரும்புவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply