தருமபுரி,
தருமபுரியில் அதிகரித்துவரும் சாதி, மதவெறி நடவடிக்கைகளை முறியடித்திடவும், சமூக நல்லிணக்கத்தை பேணிக் காத்திடவும்  தருமபுரி மாவட்டத்தில் ‘சமூக நல்லிணக்க மேடை’ துவக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் நடைபெற்ற துவக்க விழா கூட்டத்திற்கு  ஓய்வு பெற்ற பேராசிரியர் இ.பி.பெருமாள் தலைமைவகித்தார். பாரதிபுத்தகாலய நிர்வாகி ஆர்.சிசுபாலன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் இதழ் ஆசிரியர் எண்.குணசேகரன்,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஏ.குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.தேவராசன்,  விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன்,  பாடிநாகராஜன் (காங்கிரஸ்), தமுமுக தலைவர் சாதிக்பாட்ஷா,  சுபேதார் (மமக), அன்வர்பாட்ஷா (முஸ்லீம்லீக்) ஓய்வு பெற்ற மாவட்ட கல்விஅலுவலர் ராஜசேகர், பேராசிரியர் சீனிவாசன், பாதிரியார் சக்கரையாஸ், பாஸ்டர் ராபர்ட் கென்னடிதொண்டு நிறுவன கூட்டமைப்பு செந்தில்ராஜ், மனித உரிமைக் கழகம் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் இ.பி.பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். அக்டோபர் 2 ம் தேதி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனிதசங்கிலி நடத்துவது என்றும், சுதந்திர தினத்தன்று சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தி மாணவர்களுக்கு கட்டுரை கவிதை ஓவியப் போட்டி நடத்துவது என்றும், பெண்கள் மத்தியில் மதச்சார்பற்ற கருத்தை முன்னெடுப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave A Reply