கோவை, ஜூன் 20-
சம்பள உயர்வு கோரி வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கேரள மாநிலத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு ஜூலை முதல் தினக்கூலியாக ரூ.301 வழங்கப்பட்டு வந்த ஊதியம் தற்போது ரூ.313 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள அதே தோட்ட நிறுவனங்களின் கீழ் தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.234 மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும் கேரளாவில் பணியாற்றும் ஊழியர்களை காட்டிலும் அதிக நேரம் பணி செய்து வருகிறோம். இவ்வாறு ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கேரளாவில் ஒரு சம்பளமும், தமிழகத்தில் ஒரு விதமான சம்பளமும் என பிரிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கேரளாவில் வழங்கப்படும் ஊதியத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply