கோவை:
கோவையில் 3 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: மாணவர்கள் சேர முன்வராத தமிழகம் முழுவதிலும் உள்ள 11 பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் மூடப்பட உள்ளன. இதன்படி சென்னை மேக்னா காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், சென்னை ஸ்ரீரங்கம்பாள் காலேஜ் ஆஃப் ஆர்க்கிடெக்சர், மதுரை சி.ஆர்.எஞ்சினியரிங் கல்லூரி, கோவை மஹாராஜா பிரித்வி என்ஜினியரிங் காலேஜ், நெல்லை ஜோ சுரேஷ் என்ஜினியரிங் காலேஜ், கோவை விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி ஃபார் வுமன், கோவை சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேசன் டெக்னாலஜி, திருச்சி ஆர்.வி.எஸ். – கே.வி.கே இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், திருச்சி சுவாமி விவேகானந்தா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், மதுரை மைக்கேல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆகிய கல்லூரிகள் மூடப்பட்டவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.