கோவில்பட்டி;                                                                                                                                                                             கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்தாமல் ஆசிரியை ஒருவர் பேஸ்புக், வாட்ஸ்அப்பில் மூழ்கிவிடுவதாக குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏறப்ட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு செமப்புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கணித ஆசிரியையாக கோவில்பட்டியை சேர்ந்த பாத்திமா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் வகுப்பில் பாடம் நடத்தமால் செல்போனில் போஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூடிப் மூலமாக பாடல்களை கேட்டு வருவதாகவும், மாணவர்கள் சந்தேகம் கேட்டால் அவதூறாக பேசுவதாகவும் கூறி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்தும் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாணிக்கம் மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.

முறைப்படி புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை இடமாற்றம் செய்யும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply