குழித்துறை;
கேரளத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட மாவட்ட பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் ஜான்பிரைட் ஆகியோர் படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பூசணிக்காய்களுடன் வந்த லாரியை நிறுத்த சைகை காட்டினர். லாரியை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு லாரி டிரைவர், கிளீனர் தப்பியோடினர். தொடர்ந்து லாரியை சோதனை செய்த போது அதில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

லாரியில் இருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும், ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலும் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave A Reply